நாம் மட்டுமே நிஜம்

எதுவும் நிரந்தரம் இல்லை
நானும் நிரந்தரம் இல்லை
நீயும் நிரந்தரம்
இல்லை
இந்த காதல்(நாம்) மட்டுமே
நிரந்தரமானது
***********************


நானும்
நீயும்
ஒன்றாகவே
துயிலுவோம்(Sleep)
எங்கள் இருவருக்குள்
தாழ்பாளே(Lock)
தேவைபடுவதில்லை

இரகசியம்
என்று
ஒன்று
இருந்தால்
தானே
தேவை பட

Shutdown னும்
Restart டும்
Process சும்(மீண்டும் மீண்டும் சுழற்சி ஓயாது
எங்கள் வீழ்ச்சி(கடவுளின் திருவடிகளை என் கடவுளுடன் செல்லும் பொழுதும் அதன் பிறகும்
தொடரும் எங்கள் காதல்) தாண்டியும் )
ஒன்றாக்கும்
எங்களை
மொத்தத்தில்
இருவருக்குமிடையே
எந்த ஒரு வேறுபாடும்
கிடையாது

முந்தி
இறந்து
பிந்தி பிறப்பேன்
நான்

பிந்தி இறந்து
முந்தி பிறப்பாய்
நீ

மூவுலகையும்
ஒன்றாக
ஆளப்பிறந்தவர்கள்
நாங்கள்

உன் ஒருவனுக்கு
மட்டுமே
முந்தி விரிப்பேன்
நான்


என்
அங்கத்தை
கூறு கூறாய்
வெட்டி போட்டாலும்
ஒவ்வொரு செல்லும்
உன் பெயரை தான்
சொல்லும்


சத்தியவான்
சாவித்ரி

அம்பிகாபதி
அமராவதி

வள்ளுவன்
வாசுகி

ஷாஜகான்
மும்தாஜ்

மஜ்னு
லைலா

ரோமியோ
ஜூலியட்


இவைகளெல்லாம்
யார் கண்டது

நீயும்
நானும்
உண்மை
நாம் கண்டது..
நாளும் வாழ்வது...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (12-May-16, 4:25 pm)
Tanglish : naam mattumae nijam
பார்வை : 146

மேலே