மூடப்படும் தொழிற்சாலைகள்

பயணம்,
என்றும் தொடர்வது.

ஒருமுறை போனால்,
மறுமுறை வரும்.

போக்குவரத்தை நிறுத்த – எங்கும்
சுங்கச் சாவடிகளும் இல்லை
போக்குவரத்துக் காவலரும் இல்லை.

போக்குவரத்தினால் மாசு ஏற்படலாம்,
ஆனால், அம்மாசினால்,
போக்குவரத்தே கூட நின்றுபோகலாம்,
இதில் வியப்பு,
அந்த வாகனத்திற்கு
உருவமும் இல்லை
உருளும் சக்கரமும் இல்லை.

ஆனால், இவ்வாகனத்தை
உற்பத்தி செய்ய – பல
தொழிற்சாலைகள் உள்ளன
இருந்தும், இத்தொழிற்சாலைகளுக்கு இடையே
போட்டியும் இல்லை.

அவ்வாறு இருந்தும்,
பல தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன,
நம்மால்.
இத்தொழிற்சாலைகள் இல்லாமல்,
நம்மால் பயணத்தை தொடரவும் இயலாது.

ஒருவேலை, போக்குவரத்து நின்றுபோனால்,
ஒருவரது பெயர் – சிவம்
ஆனாலும், அவர் - சவம்
எனப் பெயர் மாற்றம்பெறுவார்,
அத்தொழிற்சாலையின் பெயர் – மரங்கள் !
உற்பத்தியாகும் வாகனம் – மூச்சுக் காற்று !.

- செ.கிரி பாரதி.

எழுதியவர் : செ.கிரி பாரதி (13-May-16, 4:16 pm)
பார்வை : 113

மேலே