காண வாரீர்

எழில்கொஞ்சும் பசுமை
***எங்கும் விரிந்திருக்கும் !
கிழித்துவரும் காற்றோ
***கிறங்க வைக்குமுள்ளம் !
செழித்திருக்கும் நிலத்தில்
***தெள்ளு தமிழ்மணக்கும் !
பொழில்சூழும் அழகில்
***பொங்கி வருமின்பம் !
அழிவில்லா இயற்கை
***ஆத்ம சுகமளிக்கும் !
விழியள்ளும் காட்சி
***விரைந்து காணவாரீர் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-May-16, 11:03 pm)
பார்வை : 4939

மேலே