நம் மாநிலம்

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு
இடையில் வயலைத் தேடி
விதைக்கும் விவசாயின்
நிலை

பிளாட்டுகளுக்கு இடையில்
கிணற்றைத் தொலைத்த
நிலை

விதைத்த விதைகள்
விளைப்பொருட்கள்
ஆகும் முன்பே
களவாடிய வெற்று
விளைநிலம்

தண்ணீரை திருடி
தொழிற்சாலைக்கு இட்டு
விளைபயிரின் உயிரைப்
பறிக்கும் கொடூரம்

விளை நிலத்தில்
விளை பயிர் இன்றி
மால்களும் மாளிகைகளும்
மலிந்த மாநிலம்
என்ற பெருமை
நம் தமிழ் நாட்டிற்கு
நிச்சயம் உண்டு.

அரசு விவசாயிகளின்
குறைகளை காணாதவரையில்

காலம் முடிந்தபின்
கைதூக்கி நிற்க வைத்து
என்ன பயன் ?

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (14-May-16, 9:09 am)
Tanglish : nam maanilam
பார்வை : 191

மேலே