மூடர்களின் கதைகள்

அது வெயில் காலம் , இந்த வருடம் வெப்பம் அதிகமாக இருந்ததால் காட்டில் இருந்த அனைத்து ஆறுகளும் வற்றிப் போயிருந்தது

ஒரே ஒரு குளத்தில் மட்டும்
தண்ணீர் கொஞ்சம் மிச்சமிருந்தது

அந்த குளத்தின் வழியாக வந்த யானை கூட்டமும் ,எருமைக் கூட்டமும் தண்ணீர் அருந்த குளத்தினுள் செல்ல இரண்டிற்கும் தள்ளு முள்ளு ஏற்ப்பட

இந்த குளத்தை நாங்கள் தான் முதலில் கண்டோம் ஆகையால் இதிலிருக்கும் தண்ணீர் எங்குளுக்கே சொந்தம் என யானைகள் கூற

அதற்கு எருமைகள், இந்த குளத்தை நாங்கள் தான் முதலில் கண்டோம் முதலில் நாங்கள் தான் தண்ணீர் பருகுவோம் என எருமைகள் கூற

இப்படியே இரண்டும் சண்டை போட உச்சி வெயிலில் குளத்தில் இருந்த கொஞ்ச தண்ணீரும் ஆவியாகி போனது

பிறகு இரண்டும் தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தியது


இதே போலத் தான் நாமும் நமக்குள்ளேயே ஒருவர்க்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு மூடர்களாகி விடுகிறோம்-விக்னேஷ்

எழுதியவர் : விக்னேஷ் (13-May-16, 8:03 pm)
பார்வை : 451

மேலே