காதலனின் மடல்
என் நெஞ்சமென்னும் சோலையில்
நீங்காது வீசும் தென்றலிலே!
நித்தம் ஒரு சுகமாய்
வாழ்ந்து கொண்டிருக்கும் வண்ணமயிலே!
உன் அங்கமன்னும் தங்கமேனியிலே
ஆயிரமாயிரம் முத்தங்களோடு
வடிக்கிறேன் இம்மடலை
வறண்ட பூமிக்கு நீரைப்போல
இருண்ட வானத்திற்கு நிலவைப்போல
என் உடலுக்கு உயிர் தந்தவளே!
உன் உயிர் தந்த உணர்வில்
அகமகிழ்கிறேன் அன்பே!
என் மகிழ்ச்சி (சந்தோசம்) நிலைத்திட
நான் என்ன செய்ய வேண்டும் பெண்ணே?