நாற்காலி

அட ...நாகரீக நண்பனே!

உனக்காக
காத்துக்கிடப்பது
நான்மட்டுமல்ல..
இந்த நாடே...

உதவி செய்வேன் ... நீ
எனக்கு பதவி கொடு
உனைத் தடவி சென்றேன்..
எனை நீ துறவியா? என்றாய்?

பதவி போதையை
கையில் வைத்துக்கொண்டு
உனைக் கடந்து
செல்வொரையெல்லாம்
பார்த்து
பல் காட்டுகிறாய்...

உனைத் தீண்டியவனுக்கு
போதை மட்டுமல்ல
பொறாமையும்
கொடுக்கிறாய்..

உனக்கும் உயிர்
இருந்தால்
நிச்சயம்
கொண்டாடப்படும்
"நாற்காலிகள் தினம் "

வியர்வை சிந்தும் வினாடிகள்
களைப்படைந்த பாதங்கள்
எந்தச் சூழலில்
உன் பெயர்
"தற்காலிக காதலி"

உனக்கு வரலாறு உண்டு..
உனைப் பிரசவம்
பார்த்தவனுக்கு
வரலாறு உண்டா?

ரேசன் கடை,மருத்துவமனை,
பேருந்து நிலையம்,வேலைவாய்ப்பு அலுவலகம்,
ரயில் நிலையம்,திரையரங்கம்,
தபால் நிலையம்..
இங்கெல்லாம்
காதுக்கிடக்கிரார்கள்..
உனக்காய் ..

உனக்கு மட்டும்
நடந்து போக
கற்றுக்கொடுத்திருந்தால்

"ஜனநாயகம் "
என்றோ
கழன்று போயிருக்கும்..

கொள்கைபிடிப்பற்றவனே!!!

உனக்குமட்டும்
எப்படித்தெரிகிறது
கொள்ளையடிப்பவர்களை..

நாற்காலியே..

நீயொரு கன்னிப்பெண்..
உன்னை கற்பமாக்குவதட்கு
காத்திருக்கிறார்களே தவிர
உன்னை கல்யாணம்
செய்வோர் எவரும் இலர்..

நீ குழந்தையும்
பெற்றுக் கொள்வதில்லை

உண்மையில் நீ
இந்திய
ஜனத்தொகை
அறியாதவன்..

அபரிவிதமான செல்வாக்கு,
மிதமிஞ்சிய பொருட்செல்வம்,
வெள்ளை வெட்டி,
வெள்ளை சட்டை,
காதர் துண்டு
இந்தப்பட்டியலில்
நிச்சயம்
உனக்கோர் இடமுண்டு..

நீயும் உயர்தவன் தான் ..

நன்றியோடு க.நிலவன்..

எழுதியவர் : க nilavan (14-May-16, 6:31 pm)
Tanglish : naarkaali
பார்வை : 178

மேலே