இன்னொரு ஜென்மம் வேண்டுகிறேன்
என் வார்த்தைகளின் வெளிப்பாடாய்
என் மௌனத்தின் வார்த்தைகளாய்
என் தனிமையின் சிந்தனைகளாய்
என் உயிரில் சுவாசமாய்
என்னில் நேசமாய்
என்னுள் கலந்தவனே
இன்னொரு ஜென்மம் வேண்டுகிறேன்
அப்போதும் உன்னையே நேசிப்பேன்
இதைவிட அதிகமாக!!