உருகும் தீப்பிழம்புகள் - கற்குவேல் பா

வியர்வை நாற்றம் ,
அழுக்கு படிந்த சட்டை ,
எண்ணெய்
இறைத்து வாரிய தலைமுடி ,
மஞ்சள் பையில்
மதிய உணவு ,
அடிப்பட்டை தேய்ந்திருக்கும்
காற்சட்டை ,
தொய்வுப்பட்டை சுற்றிய
1100 அலைபேசி ,
அப்போதே தைக்கப்பட்டிருக்கும்
ஒற்றைக்கால் செருப்பு - என
ஒட்டுமொத்த சொரூபமாய் ,
எவரேனும் காணப்படின் ;
முகம் சுளிப்பதை தவிர்த்து,
சிறு புன்னகை வீசுங்கள் கன்னியரே !
காரணம் ..
அவர்கள் ,
ஏதோ ஒரு குடிசையில்,
மணக்கோலம்
காணக் காத்திருக்கும் - உங்களைப்
போன்றதோர் தங்கைக்கு ,
அண்ணனாகவோ ,
தம்பியாகவோ இருக்கலாம்,
நிதர்சனமாக !

#உருகும்_தீப்பிழம்புகள்

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (16-May-16, 8:19 pm)
பார்வை : 105

மேலே