வாழ்க்கை வாழ்வதற்கே
மண்ணில் பிறந்தோம்
மகத்துவமாய் வாழ...!
கல்வி பயின்றோம்
கலங்கிடாமல் வாழ...!
திருமணம் செய்தோம்
திருப்தியாக வாழ...!
வேலைக்கு சென்றோம்
வேதனையின்றி வாழ...!
பணம் சம்பாதித்தோம்
பட்டினியின்றி வாழ...!
வாழ்க்கை வாழ்வதற்கே.......
வாழ்ந்து பாருங்கள்.
-கவிபிரவீன்குமார்.