யார் வருவார்
ஒரு தேசத்தின் பருவ காலம்
தேர்தல் காலம்
எல்லாவற்றிற்கும் பருவங்கள்
மாறுவது இயற்கையே
ஆனால் தேசத்தின் பருவ காலம்
மாறுவது மக்களால்
மக்கள் நினைத்தால் தான்
செழிப்பும் சிறப்பும் நாட்டில்
ஒரு தலைவன் தன்னைத்தான்
தேர்ந்தெடுப்பதில்லை
மக்களே அதற்கு பொறுப்பு
நல்லாட்சியும் நம்மாலே
கொடுங்கோல் ஆட்சியும் நம்மாலே
இன்று நம் நாட்டின் பருவ மாற்றம்
வேகமாக சுழன்று வருகிறது,
நாட்டின் ஆட்சி மாற்றமாக
நாமே நமக்கு நமக்காக
நண்பனாக தலைவனாக உடன் பிறந்தவனாக
நாளும் பொழுதும் நமக்காக
வாழும் ஆளும் நல்லதொரு
தலைவனை தகுந்தபடி
தேர்ந்தெடுப்போம் ,
இன்று தெரிந்து கொள்வது
நாளைய தலைவரை
யார் வருவார் இந்த அரியாசனம்
காத்திருக்க பார்த்திருக்க
புகழ் சேர்த்திருக்க
மக்கள் மனமெல்லாம் பூத்திருக்க
யார் வருவார் இந்த அரியாசனம்