சித்திரக் கவி
நாடி யேமன மோடுதே
நாடு மாவென நாடுதே .
நாட வாயென வாடுதே .
நாடி யோடியு மாடுதே .
பொருள் :- இறைமையை நாடி மனம் ஓடுகிறது . இறைமை தம்மை நாடுமாயென நாடுகிறது . இறைமை நாடவில்லை எனில் வாடுகிறது . இறைமையை நாடிவிட்டால் இன்பத்தில் ஆடுகிறது மனம் .