அமுதம் சிந்தி
அடிக்கலாம் வெட்டலாம்,
தப்பில்லைதான்
கொத்திவிட்டுத்
தலையுயர்த்தித் திரியும்
நச்சுப் பாம்புகளை.
உறவு வளையத்
தேவையின் பொருட்டு
நஞ்சைப் பெற்றும்
அமுதம் சிந்தித்
தொலைக்க வேண்டி இருக்கிறது.
அடிக்கலாம் வெட்டலாம்,
தப்பில்லைதான்
கொத்திவிட்டுத்
தலையுயர்த்தித் திரியும்
நச்சுப் பாம்புகளை.
உறவு வளையத்
தேவையின் பொருட்டு
நஞ்சைப் பெற்றும்
அமுதம் சிந்தித்
தொலைக்க வேண்டி இருக்கிறது.