அப்பா பற்றி

நான் பிறக்கும் தருணத்தில்
அம்மாவின் வலியை விட
அதிகம் துடிப்பவன் நீ!
பாதி மார்பில் பிள்ளையையும்
மீதி மார்பில் மனைவியையும்
மொத்த குடும்பத்தையும்
மார்ப்பில் சுமப்பவன் நீ!
பாசம் என் மேல்
அதிகம் வைப்பவன் நீ!
அதை வெளிக்காட்ட
தெரியாதவன் நீ!
வீரம்,விவேகம் கற்று
கொடுப்பவன் நீ!
கிருட்டிணன் தலை மேல் காக்கும்
ஐந்து தலை நாகம் போல
குடும்பத்தை மேல் நிறுத்தி
அதை காப்பவன் நீ!
நம் குடும்பத்தை காப்பதற்கு
தெய்வம் வருவதில்லை...
காப்பதற்கு தெய்வமாக
வருகிறார் நம் அப்பா...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (17-May-16, 12:20 am)
Tanglish : appa patri
பார்வை : 702

மேலே