பூமி உள்ள காலம்வரை
பூமி உள்ள
காலம்வரை
என் ஜீவனில்
வாழும்.....சாமி
நீதானே.....!!
வரம் தந்தாலும்
மறுத்தே
நீ.....வர
மறந்தாலும்.....என்னை
ஆளும்
ஆண்டவன்
நீயே......!!
நல்ல நாள்
பார்த்து
காத்திருக்கிறேன்....
என்கிறாய்
நீ..... உனக்கான
காத்திருக்கும்
ஒவ்வொரு
நொடியும்.....
நல்ல நாளே.....!!
சாமி
முன்னாடி
திலகமிட்ட
நாளைப்போல.....
மகிழ்வு தரும்
நாளும்
வேறேதும்
இல்லையே.....!?
உனக்காக
நானும்.....
எனக்காக
நீயும்....வரம்
கேட்கும்
அந்த நிமிஷங்கள்
உன் கண்ணீரில்
பார்த்தேனே.....
உண்மையில்
பதறித்தான்
போனேன்.....
உன் பாசம்
கண்டு......!!
பட்டுப்
பூவே..... விட்டுப்
போகாதே.....
வாட்டும்
இந்த தனிமையை
விரட்டும்
வித்தைக்காரி
நீதானடி......விரைந்து
நீயும்.....
என்னைச்
சேர்ந்திடு......!!
பேச வழி
இல்லாமல்
கொல்லாமல்
கொல்லுதே
நீ..... தந்த
வலி.....
ஒற்றைத் தீப்
பொறியில்
ஒருபிடி
சாம்பலாவேன்
ஒருமுறை
பேசாமலே
நீ...... போனால்......!!
இனி
என்ன என்ன
நேர்ந்திடுமோ
என்கிற
அச்சத்தில் நகரும்
இந்த
வாழ்க்கை....நிச்சயம்
நிம்மதி
இல்லை.....இருவராக
தனித்திருக்கும்
நமக்கு......!!
ஜாதகம்
சாதகம்
பார்த்து
வருவதில்லை
காதல்.....ஆனாலும்
சாகசம்
மாயம்
எல்லாம்....சாதாரணமாய்
வந்து
விடுகிறது.....!!
சொல்லாமலே
யார்
பார்த்தது.....?
இன்று
பார்க்காமலே
கொன்று
போவது யார்.....?
உயிருக்குள்
உயிர் ஓன்று
உனக்காக
உயில்
எழுதுதே.....
இது கிழித்துப்
போடும்
மடல் அல்ல.....
அழிக்கமுடியாத
என்
அன்பின் தேடல்.........................................