வேட்டை ஆரம்பமாகிருச்சுடோய்
தலைவரே காலைல இருந்து எதுக்கு அடிக்கடி ' வேட்டை ஆரம்பமாகிருச்சுடோய்'ன்னு சொல்லறீங்க?
@@@
நாம பத்து பேரும் எதுக்குடா ஒரு கட்சிய தொடங்கி இருக்கோம்.
@@
தெரீலீங்க தலைவரே.
@@@
வேட்டையாடத்தாண்டா முண்டம்.
@#@
அய்யோ தலைவரே வேட்டையாடறது சட்டப்படி குற்றமாச்சே.
@@@
டேய் தடிமாடு நாஞ் சொல்லறது மிருக வேட்டை பறவை வேட்டை இல்லடா.. வசூல் வேட்டை. வசூல் வேட்டை வசூல் வேட்டைடா எருமை.
@@#@
அந்த வேட்டைய எப்படி ஆடறது?
@@
நம்ம கட்சி பேருள ஒரு நன்கொடை வசூல் ரசீது புத்தகம் அச்சடிச்சு வச்சிட்டு தெனம் ஒரு அஞ்சு கடைங்களுக்கு நாம பத்துப் பேரும் போயி கடைக்காரங்கள மெரட்டி நன்கொடை வசூலிக்கணுண்டா நாயே.