அசிங்கமான சுந்தரி

உம் பேரு என்னம்மா?

@@@@@

எம் பேரு அழகுசுந்தரி- ங்க அய்யா.

@@@@

அழகு நல்ல தமிழ்ச் சொல் தான். சுந்தரி -ன்னா என்னம்மா அர்த்தம்.

@@@@@

சுந்தரி - ங்கற பேருக்கு என்ன அர்த்தம்னு என்னோட அம்மா அப்பாவுக்கே தெரியாதுங்க அய்யா.

@@@@

சரிம்மா அசிங்கமானசுந்தரி -ன்னு யாரு பேராவது இருக்குமா?

@@@@
இருக்காதுங்க அய்யா. சில சமயம் என்னோட தோழிகள் தான் அசிங்கமான சுந்தரின்னு என்னக் கிண்டல் பண்ணுவாங்க அய்யா.
@@@@@
உண்மையிலேயே நீ ரொம்ப அழகான பொண்ணும்மா. எம் பொண்ணு கண்மணி - யவிட நீ ரொம்ப அழகா இருக்கறம்மா.
@@@@
ரொம்ப நன்றிங்க அய்யா.
@@@
சரிம்மா மறுபடியும் உம் பேருக்கு வர்றேன். சுந்தரி-ங்கற இந்திப் பேருக்கு அழகி, அழகானவள்-ன்னு அர்த்தம். அப்ப உம் பேரு அழகுஅழகி. அழகு அழகின்னு பேரு வச்சதுக்கு பதிலா அழகி ன்னு பேரு வச்சிருக்கலாமே.
@@@@
அய்யா நீங்க சொல்லறது சரிதாங்க அய்யா. எனக்கு அழகி -ன்னு வெறும் தமிழ்ப் பேர வச்சா எல்லாம் எம் பேர கிண்டல் பண்ணுவாங்க அய்யா. இந்திப் பேர வச்சாத்தான் நமம தமிழ் மக்கள் நல்ல பேருன்னு சொல்லுவாங்கனு நெனச்சு என்னோட அம்மாவும் அப்பாவும் அழகு-ங்கற சொல்லுக்குப் பின்னாடி சுந்தரி - ங்கற இந்திப் பேர எணச்சிருப்பாங்க அய்யா.
@@@@
நீ சொல்லறதும் சரிதாம்மா. நம்ம தமிழர்களில் பெருமபாலொர் தங்கள் பிள்ளைங்களுக்குத் தமிழ்ப் பேருங்கள வைக்கறது ரொம்ப கேவலமான செயல்ங்கற உயர்ந்த பண்பாடு உள்ளவங்கம்மா. இந்தி (பாரசீகம் + சமஸ்கிருதம்) மாதரி தமிழும் கலப்பட மொழியா இல்லையே. என்ன செய்யறது?
@@@@@@@@@@@@@@@@@@@@@
சன் செய்தி: அழகுசுந்தரி என்ற பெண்ணிடம் நகை பறிப்பு.

எழுதியவர் : மலர் (22-May-16, 11:06 pm)
பார்வை : 189

சிறந்த நகைச்சுவைகள்

மேலே