ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


மனத்தால் செதுக்கினான்
உளியில் செதுக்கும் முன்
சிற்பி !


பன்னாட்டு மொழி பண்பாட்டு மொழி
உலகின் முதல் மொழி
தமிழ் !

துன்ப இருள் நீக்கி
இன்ப ஒளி தரும் விளக்கு
திருக்குறள் !

அன்று சொன்னது அர்த்தம் உள்ளது
இன்றும் நன்மை தருவது
ஆத்திசூடி !

நல்வழி அறநெறி
நான்கே அடியில்
நாலடியார் !

பொய்க்கின்றன
கற்பிதங்கள்
அழகுதான் கருப்பும் !

உதட்டில் ஆன்மிகம்
கண்களில் காமம்
சாமியார் !

விவேகமன்று
விளைநிலங்களில்
கட்டிடங்கள் !

உருவம் இல்லை
உணர முடிந்தது
தென்றல் !

காண்பதும் பொய்
நகரும் மரங்கள்
தொடர்வண்டிப் பயணம் !

ஒற்றைக்கால் தவம்
மீனுக்காக
கொக்கு !

மழை கடல் மேகம்
தொடர் பயணம்
இயற்கை !

தெரிவதில்லை சுழல்வது
கண்களுக்கு
பூமி !

காட்சிப்பிழை
நகரவில்லை
சூரியன் !

நன்கு விளையும்
ஏர்முனை
வலி தாங்கிய நிலம் !

சுமையானலும்
பாதுகாப்பானது
ஆமையின் ஓடு !

வராது ஓசை
மீட்டாமல்
வீணை !

ஒலிக்காது
தட்டாமல்
மேளம் !

.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (23-May-16, 7:14 pm)
பார்வை : 131

மேலே