மின்சாரத் தீப்பொறி

செவ்வானம்
போன்று சிவந்த பழம்
இரவின்
பசி கண்களை மறைத்தது
ஏறிச் சென்று
பறிக்கையில்
உடல் கருகி விழுந்தான்......


ஊரே
அலரியடித்து வந்தது...
குடிசைகள்
தீ தீண்டாது தப்பித்தன...
அவன் புகழ் பாடினர்...
கண்ணீர் சிந்தினர்......


இரக்கமுள்ள மனிதர்களே
இனியும்
ஓர் உயிர்
பசியில்
பஷ்பம் ஆகிடக் கூடாது...
அவன்
ஜீவனின் கடைசி குரல்...
மின்சாரத் தீப்பொறியாய்
இருண்ட
நெஞ்சமெங்கும்......

எழுதியவர் : இதயம் விஜய் (27-May-16, 8:56 am)
பார்வை : 67

மேலே