உனக்காகவே நான்
![](https://eluthu.com/images/loading.gif)
எட்டா கனிதான் நீ...
உனை எண்ணி
ஏப்பம் விடுவதிலே
ஏற்றம் காணுதய்யா
இவள் காதல்!..
கிட்டா வரம் தான் நீ...
உனை பார்த்து
மோகம் கொள்வதிலே
மோட்சம் காணுதய்யா
இவள் உலகம்!..
கை சேராவிட்டால் என்ன?,
விரல்கள் உனையே வரையுமடா!
மெய் தீண்டாவிட்டால் என்ன?,
உயிரும் உனை தான் அணியுமடா!