வழியனுப்பு

கவிதை விதை
காவியம் ஓவியம்
காதல் கூடல் ஊடல்


ஒரு மலை
ஒரு குகை
ஒரு ஒளி
இரு துளி
தேன் சிந்துவதோ

தாழிட்ட மனதை
யாழ் திறக்கும்
யாழ் நீ பைங்கிளியே



திகட்டாத தேன்
முத்தான பனி
மரிக்கொழுந்து வாசம்
எல்லாம் பம்மாத்து
உன் அருகில் அது எல்லாம் வெறும் தூசு

என்னுள் உன் மூச்சுக்காற்று ஏதோ பண்ணுதடி
மல்லிகையில் விரும்பி மாட்டிக்கொண்ட வண்டாய் கிடக்கிறேனடி
அதற்காக
என்னை தவிர்க்காதே
தகிக்க வையடி

ஆனந்தகண்ணீரை
அழுகை என்று எண்ணிவிடாதடி

மரணத்தை விரட்டும் மருந்து நீயடி
எந்தன் பக்கத்தில் நீ

மரணத்தை எதிர்நோக்கும்
என் உடலடி
உயிர் நீ அருகில் இன்றி

என் உயிருக்கு தான்
உனை பார்க்க கொடுத்து வைக்கவில்லை
என் உடலுக்காவது அந்த பாக்கியம் கிடைக்குமா?

எல்லோரும் இருந்தும் நீ இன்றி தோப்பிலே
தனிமரமானேன்
என் உடலுக்கும் அந்த நிலை வரவேண்டாம்
இந்த பட்டமரத்தை தூக்கி வாரி அணைத்து அழ எனக்காக கடைசியாக ஒருதடவை
வந்து விடு என் இறுதிசடங்கிற்கு
சம்பிரதாயத்திற்காகவாவது
சொல்லிவிடு பூக்கள்
என் இதயத்தில் விழட்டும்
மண்ணில் விழும் பூக்கள்
உன் வருகைக்காக

எனக்கு விடைகொடு
போகிறேன்


உயிரே..................................................

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (27-May-16, 7:42 pm)
Tanglish : vazhianuppu
பார்வை : 128

மேலே