எம் பொண்ணுப் பேரு பேடி
என்னடா தம்பி நீ தமிழாசிரியரா இருந்துட்டு உம் பொண்ணுக்கு எதொ இந்திப் பேர வச்சிருக்கறயாம்?
நான் என்ன அண்ணே செய்யறது. 98% தமிழாசிரியர்களே அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்களாத் தான் வச்சிருக்காங்க. நா எம் பொண்ணுக்கு தமிழ்ப் பேர வச்சா என்ன எல்லாம் கிண்டல் பண்ணி கேவலமாப் பேசுவாங்க அண்ணே.
ஓ.....அப்பிடியா. அந்த அளவுக்கு நம்ம பண்பாடு சீரழிஞ்சு போயிருச்சா? சரி உம் பொண்ணு பேரு என்ன?
எம் பொண்ணுப் பேரு பேடி. .
என்னது உம் பொண்ணுப் பேரு பேடியா? அந்தப் பேருக்கு என்னடா தம்பி அர்த்தம்?
அந்தப் பேருக்கு என்ன அர்த்தம்னு எனக்குத் தெரியாதண்ணே. ஒரு கிரிக்கெட் வீரர் பேரும் பேடின்னு முடியும். இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியின் பேரும் பேடின்னு முடியும். எம் பொண்ணு அவுங்களப் போல ஒரு சிறந்ந விளையாட்டு வீராங்கனையாக வந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வாங்கணும். இல்லன்னா அவ ஒரு ஐபிஎஸ் அதிகாரியா வந்து நாட்டு மக்களுக்கு நல்லது செய்யணும். அது தான் என்னோட ஆசை.
தம்பி, பேடிங்கற சொல் நம்ம தமிழ் மொழிலயும் இருக்குதே அது தெரியுமா உனக்கு?
சத்தியமாத் தெரியாதண்ணே.
நீ எல்லாம் ஒரு தமிழாசிரியர். சரி அத விடு. தமிழ்ல 'பேடி'ங்கற சொல்லை
முன்பெல்லாம் 'அலி'ன்னு சொல்லுவாங்க. அந்த அலிங்கற சொல்லத்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் 'திருநங்கை'ன்னு அழகான பொருத்தமான சொல்லா மாத்தினாரு. இப்பச் சொல்லு. உம் பொண்ணுக்கு 'திருநங்கை' ன்னு அர்த்தம் தர்ற அந்த பேடிங்கற பேரே தொடர்நது இருக்கணுமா இல்ல அவளுக்கு வேற நல்ல தமிழப் பேர வைக்கப்போறயா?
'பேடி'ங்கற பேருக்கான அர்த்தமெல்லாம் தமிழர்கள் யாருக்கும் தெரியாதண்ணே. அந்த இந்திப் பேரே அவளுக்கு இருந்துட்டுப் போகட்டும் அண்ணே.
சரிடா தம்பி, அது உன்னோட உரிமை உன்னோட விருப்பம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆதாரம்: வின்ஸ்லோ'ஸ் தமிழ் ஆங்கில அகராதி. 1992. முதற் பதிப்பு 1862. பக்கம் 815.