மெய்பாடும் வெளிப்பாடும்

சொல் கேட்டார்க்குப்
பொருள் கண்கூடாதல்
மெய்ப்பாடு என்றால்
சொல் ஒன்றினைக்
கேட்டதும் மனவுணர்வு
துள்ளி எழவேண்டும்
வெள்ளி எழுவதாய்
வெளிப்பட வேண்டும்.

உண்மையில்லாத பெயரும்
பெயரில்லாத உண்மையும்
வெறும் வெளிப்பாடேயன்றி
இலக்கிய மெய்ப்பாடல்ல.
கிரேக்க மொழியினில்
சோஃபியா என்பது
ஞானம் என்றாயின்
அரபு சூஃபியில் அது
அறிவு தானென்று ஒரு
முரணான கருத்தை
நானிங்குப் பதித்தாலும்
மெய்யாகவே அது
மெய்ப்பாடு ஆகாதோ!

கவலை நிறைந்ததோர்
காலை நேரத்தில்
உண்மையான பெயரும்
பெயரில் உண்மையும்
கொண்ட இறைவனை
மண்டியிட்டு மன்றாட
முன் பின் தெரியா
குழந்தை ஒன்று
என்னைப் பார்த்துச்
சிரித்துக் கையாட்ட
எனது மயக்கம்
கனவாய்க் கலைந்தது.

குழந்தை உருவில்
வெளிப்பட்ட இறைவன்
மெய்ப்பொருள் என்றால்
அவனைக் கொண்டாடும்
என்னை தண்டிப்பீரோ
சூஃபிக்கள் அனைவருமே
கலகம் செய்தவரென்பது
உலக வரலாற்றில்
வெளிப்படை உண்மை..

எழுதியவர் : தா. ஜோ ஜூலியஸ் (3-Jun-16, 2:20 pm)
பார்வை : 82

மேலே