குறைபிறவி அவன்

கோட்டுக்குள் பயனப்படுவான்,
கும்மிருட்டில் துயரப்படுவான்

எண்ணங்களை சின்னதாய் செய்து,நாட்களுக்குள் சிரமப்படுவான்

விரிந்து நிற்க்கும் மனித கூட்டம்,
விசிறி பறக்கும் வான மூட்டம்..

இவ்விந்தை வரங்களுக்குள்ளே, விதவை மனங்கள்....

குறைபட்டு வாழ்வான்..
குறைபிறவி அவன்..

தன்னை தாண்டிய மனிதர் அறிய மாட்டான்...
தன்னுள் தானென்று தவமிருந்துச் சாவான்...

இடி வீழ்ந்ததாம்,புயல் பாய்ந்ததாம்.....
கோடி தேள்கள் குழுமித்து கொட்டியதாம்...
இம்சை,இம்சை எங்கும் இம்சையாம்..
குறைபிறவி அவன்...

தம் நிலை சொல்வான்,
தம் இடர் சொல்வான்...
உலகம் அவனை வீசி விரட்டுதாம்...
பரிட்ச்சையம் அற்ற கடவுள் இவனை கடிந்துத் துரத்துதாம்...

அழுவான்,புரள்வான்
தன்னை தான் மிதித்துச் சாவான்..
குறைபிறவி அவன்...

எழுதியவர் : சிவசங்கர்.சி (6-Jun-16, 8:20 pm)
பார்வை : 82

மேலே