நீ-நான் மட்டும்

விண்வெளியில்
வீடு கட்டுகிறேன்...
விண்மீன்களுடன்
விளையிடலாம்...
வானவில்லில்
கயிறு கட்டி
ஊஞ்சலாடலாம்...
நிலவில் நீந்தலாம்...
மின்னலை பிடித்து
வீட்டில் அடைத்து
வெளிச்சமாக்கலாம்...
மேகத்தை
எடுத்து போர்வை
செய்து
போர்த்திக்கலாம்...
உன் மடியில்
நான் விழலாம்...
என் மடியில்
நீ விழலாம்...
நாம் கைக்கோர்க்கும் போது
காதலை அதிகப்படுத்தலாம்...
நீ எனக்கு தாயாகவும்
நான் உனக்கு சேயாகவும்
அன்பை கொட்டி வாழலாம்..
இந்த தனிமை உலகில்...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (9-Jun-16, 11:53 pm)
பார்வை : 314

மேலே