முதிர் கன்னி
முத்து முத்தாய் மின்னும்
அவள் சொத்துகளின்
ஒன்றான பற்கள்
பல ஜென்மங்கள்
எடுத்தாலும் கிடைக்காத
வரம்
வளைந்து நெழிந்த
இடையில்
பார்த்து இருந்தால்
பாரதியின் பாடலுகளும்
மதி மயங்கி நிற்கும்
கொலுசின் ஓரத்தில்
ஒரு தினிசாய்
பயணிக்கின்றன
அவள் அணிந்த பாதணி
பூவனிந்த பாதையில்
வீசுகின்ற காற்றும்
அவள் பேசிய பிறகுதான்
தூங்கின்றதாம் என்று
கூறுகின்ற என்
காதோரம்
முதுமையிலும் கூட
இளமையான குரல்
இன்பமாய் பேசும்
பசுமை நிறைந்த
நிறம்
உலகை மிஞ்சும்
குணம்
எத்தனையோ தவமிருந்தும் அவளுக்காய் நான் இன் சடமாக கிடக்கிறேன்.
பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை