அழகின் தரிசனம்

அழகின் தரிசனம்…!!

அவள் எப்பொழுதும் ஏதேனும்
ஒரு வழியில் வீடு திரும்புகிறாள்
எந்த குறுக்குப் பாதையென்று
அறிவது அறிதாகவேயிருக்கிறது
அவ்வழியை அடையாளம் கண்டு
வழிக்காட்ட மரமோ கோயிலோ
அங்கே இருப்பதாய் தெரியவில்லை.
பறவையின் இருப்பிடம் அறிந்திடலாம்
அவள் இருப்பிடம் அறிவது
அத்தனை புதிராக இருக்கிறது
தேவதையாய் மறைந்து போகிறவள்
பேரழகின் தரிசனம் காண்பதற்கு
காத்திருக்கிறது கண்கள்
தெய்வ தரிசனம் எளிது
அழகின் தரிசனம் கடினம்
ந..க.துறைவன்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (10-Jun-16, 6:32 am)
Tanglish : azhakin tharisanam
பார்வை : 222

மேலே