மனைவியின் இம்சையும் - கவிஞனின் அவஸ்த்தையும்
கா(ய்)யை நறுக்கச் சொன்னாள்
கையை நறுக்கிக் கொண்டேன்
காய் நறுக்கத் தெரியாத நீயெல்லாம் ஒரு கவிஞா..?
போகட்டும்
பாத்திரமாவது கழுவுங்கள்..
பா – திறம் - படைத்தவனை
பாத்திரம் கழுவச்சொன்னால் எப்படி..?
நீங்கள் படைக்கும் பா திறத்தைக் காட்டிலும்
நீங்கள் துளக்கும் பாத்திரம்
பளிச்சென்று மின்னுகிறது கவிஞரே..!
சரி சரி பேசிக்கொண்டிருக்க நேரமில்லை..
சாதம் குழைந்து விடப்போகிறது வடியுங்கள்;
சரித்திரம் படைக்க துடிப்பவன்
சாத்தானிடம் சிக்கிக் கொண்டேன்
என்ன முணுமுணுப்பு…?
ஒன்றுமில்லை
உன்னை நினைத்தேன் ஒரு கவிதை முளைத்தது
எங்கேச் சொல்லுங்கள் பாக்கலாம்..!
“மதிப்பளிக்காத மனைவிக்கு - மனம் நோகாத கணவன்!
மனம் புண்படாத கவினனுக்கு - மரியாதை தராத துணைவி…!”
விளக்குமாறுக்கு வாக்கப்பட்டா வாழ்க்கை விளங்குமா..?
விளக்குமாறே வாழ்க்கையானா வசதிதான் பெறுகுமா…?
முணுமுணுத்தவாறே உணவு பறிமாறினால் மனைவி..
அவள் முணுமுணுப்பதும் ஒரு கவிதைதான்
என்பதை தாமதமாக புரிந்துக் கொண்டான்
புருஷ வேடம் தரித்த புத்திகெட்ட கவிஞன்.
சாய்மாறன்

