அவளை பற்றி வர்ணிப்பு
அவள் கூந்தல்
மயில் தோகைப்போல
அவள் நெற்றி
மேலிருக்கும் வானைப்போல
அவள் புருவம்
அர்ஜுனன் வில் வளைவு போல
அவள் கண்கள்
வானில் தோன்றும் நிலாக்கள் போல
அவள் மச்சம்
மின்னும் நட்சத்திரங்கள் போல
அவளின் இமைகள்
நிலவை மறைக்கும் மேகம் போல
அவள் உதடு
ஏழு வண்ண வானவில் போல
அவள் இடை
வளைந்து செல்லும் நதிப்போல
அவள் தேகம்
மணக்கும் பூக்கள் போல
ஆகமொத்தம்
அவள் தேவதைப்போல...

