இறவா காதல்

மெல்லிய பூங்காற்று எனை
கடந்துச் செல்ல
மென்மையாய் உன்நினைவு எனை
வருடிச் சென்றது...
நாயகா...
பூவில் தேன்போல துளித்துளியாய்
சேகரிக்கிறேன் காதலை
இன்னும் எத்தனை உதிர்ப்பேன்
நாட்களாய் மலர்களை...
மன்னவா!
கோலமிட நான் அறியேன்
இருந்தும் தினம்தினம்
இடுகிறேன் வெட்கி உனை
நினைத்து அறிவாயோ...
காதலா?
மனமொன்று சொல்ல கண்ணொண்று
செய்ய கணமாகி
லோசானது மனம் தினம்
நினைத்து பார்த்து...
கண்ணே!!!
அலைகடலாய் மனம் அலைய
திரைகொண்ட நிழலாய்
மாற்ற எத்தனிக்கின்றேன் இயலவில்லை
நிற்பாயோ என்முன்...
காதலனே...
கதைபேச வேண்டா இமைபேசவை
மௌன மொழியின்
அர்த்தம் சொல் போதும்
வாழ்ந்திருப்பேன் இர(ற)வாமல்...
கள்வனே
நினைவை திருடி இருந்தால்
மனதிடம் கேட்டிருப்பேன், திருடியது
என்னை என்றால் யாரிடம்
நான் கேட்பேன் உன்னையன்றி...
ஆருயிரே
பஞ்சபூத உடலில் குடிகொண்ட
என்னுயிரை ஓருயிராய் உருவாக்கி
உருஆக்கி உடல் இயக்கம்
தந்தவனும் நீயன்றோ...
தங்கமே!!!
உருக்கி உரு கொடுத்தால்
சிரிக்கும் தங்கமல்லாமல் உனை
கண்டாலே சிரிக்கும் தங்கமாக்கினாய்
ஏற்ப்பாயே என் தங்கமே...
செல்லமே...
கொஞ்சி பேச ஆசையில்லையோ
கொஞ்சம் பார்க்க நேரமில்லையோ
கொட்டிச் செல்ல கோபமில்லையோ
எனை தூக்கிச் செல்ல துன்பமென்னவோ!!!
ஓருயிரே
ஓயாமல் வென்று விட்டாய்
மனதை, ஊடலுடன் நின்றுவிட்டாய்
எதிரில், வந்து உயிரென
கலந்துவிடு உடலில் ஓருயிராய்,..

எழுதியவர் : இரா நவீன் குமார் (11-Jun-16, 10:46 pm)
பார்வை : 130

மேலே