மீண்டும் காதல்

மீண்டும் காதல்

கல்லில் ஒரு சிற்பம் செய்தேன்

முள்ளில் ஒரு நுட்பம் செய்தேன்

மனதில் ஒரு தேவதை
கனவில் ஒரு வேதனை

முதலில் யார் கூறுவார்
மனதில் யார் தேடுவார்

தொலைவில் இது போதுமே
தொடர்பில் பயம் கூடுமே

நேரம் அதிருமே
காரணம் உன் முகமே

காரம் கூடுமே
காரணம் உன் மறைமுகமே

தேடல் இது சுகமே
தேடினால் இதுவும் சுகமே

கண்கள் கண்களில்
பார்த்தாள் என் விழியில்

காட்சிகள் முடிவில்
பார்த்தாள் என் மனதில்

கல்லில் ஒரு சிற்பம் செய்தேன்

முள்ளில் ஒரு நுட்பம் செய்தேன்

மனதில் இவள் தேவதை
மனதில் இவள் புன்னகை

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (11-Jun-16, 10:11 pm)
Tanglish : meendum kaadhal
பார்வை : 98

மேலே