பெண்மை
அவள் கண்கள்
வானில் தெரியும் நிலவு
அவள் விழிகள்
நான் செல்லக்கூடிய வழிகள்
அவள் நெற்றி
தங்கத்தாலான கட்டி
அவள் கன்னம்
நிலவிலிருந்து தேய்த்து
எடுத்த வண்ணம்
அவள் புருவம்
காந்தத்தின் இருத்துருவம்
அவள் இமைகள்
நிலவை மூடும் மேகங்கள்
அவள் இடை
குழந்தைகள் அமரும் அழகிய இடம்
அவள் உதடு
மலர்களில் விரிந்திருக்கும் இதழ்கள்
அவள் தேகம்
முள்ளில்லாத ரோஜாக்கள்

