குடியிருக்கும் மழை நீர்
வானில் இருந்தாலும்
கடலில் இருந்தாலும்
நிம்மதி இழக்கும்
நீருக்கு,
நிரந்தரமா குடியமர
இடம் தரும்
எங்க ஊரு தெரு
கருப்பு சேலை அணிந்து
காட்சி தந்தாலும்
சாட்சி தேவையில்லை
சிதைவடைந்த கிழிசலுக்கு,
குடியமரும் மழை நீர்
குடி மக்களை
எப்போதும் மதிப்பதில்லை
ஒரு நாள்
ஓடாத மழை நீர்
ஓடிய வாகனத்தால்
வீசித்தெளிக்க—நான்
வேலியோரம் ஒதுங்க
உடைகள் அசுத்தப்படவில்லை
செருப்பு அசிங்கமானது