தடி ஊன்றும் எழுதுகோல் --தொடர் கவிதைகள் 01 --முஹம்மத் ஸர்பான்

("தடி ஊன்றும் எழுதுகோல்"எனும் தொடர் கவிதைகளை தளத்தில் எழுத இன்றிலிருந்து ஆரம்பிக்கிறேன்.உங்களை ஆதரவை பொறுத்து நான் இன்னும் என்னை வளர்த்துக் கொள்வேன்)

1.மூங்கில் காட்டில்
வெட்டப்பட்ட புல்லாங்குழல்கள்
பூக்களின் தோட்டத்தில்
இனிமையை யாசிக்கிறது..,

2.பட்டாம்பூச்சிகளின்
அழைப்புக் கடிதத்தில்
பூக்களின் மரணக் கவிதை
கண்ணீருடன் வாசிக்கப்படுகிறது

3.பூக்களை ஆயுதம் கொண்டு வெட்டி
அறுவடை செய்வதும் கொலை தான்

4.நேற்று இன்று நாளை நான் ரசித்து
வாழ்ந்து வாழப்போகும் வாழ்க்கை
என்னை பார்த்து முட்டாள்தனமாய்
சிரிக்கிறது.,

5.உலகமெனும் கலை மேடை மேல்
நின்று கொண்டிருக்கும் உயிரோட்டமான
கற்பனை வடிவங்கள் மனிதர்கள்

6.பாதையும் பயணமும் இருந்தும்
திசைகளின் முகவரி அறியாது வாழ்க்கை

7.கைதிக் கூண்டில் நிற்க வைத்து
சாட்டையால் அடிக்கிறது கடந்த காலம்

8.என் தொடர்தோல்விகளை கண்டு
கைகொட்டி சிரிக்கிறது இலட்சியம்

9.என் கனவுகளை தினமும் நிறைவேறாமல்
விலை பேசி விற்றுக் கொண்டிருக்கிறது காலம்

10.வென்றவன் வாழ்க்கையில் துணை
கொண்ட தோள்கள் தோல்வியின் அகராதிகள் தான்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (13-Jun-16, 6:13 am)
பார்வை : 237

மேலே