கற்றவர் செய்யுந் தவற்றினைப் பலரும் காண்பர்

விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை நீக்கிக்
கதிப்பட்ட நூலினைக் கையிகந் தாக்கிப்
பதிப்பட்டு வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்தில் பட்ட மறு.

( பதவுரை )
விதிப்பட்ட நூல் உணர்ந்து-ஒழுக்க நூல்களை உணர்ந்து, வேற்றுமை நீக்கி-அவைகளுக் குடன்பாடாகாதனவற்றைச் செய்யாது விடுத்து, கதிப்பட்ட நூலினை-ஞான நூல்களை, கை இகந்து-எல்லையில்லாமல், ஆக்கி-உலகோர் பொருட்டுச் செய்து, பதிப்பட்டு வாழ்வார்-இறைவனையடைய விரும்பி வாழ்கின்றவர், பழியாய செயதல்-பிறர் பழித்தற் கேதுவான செயல்களைச் செய்தல், மதிப்புறத்தில் பட்ட மறு-சந்திரனிடத்துத் தோன்றும் களங்கமே யாகும்.



( குறிப்பு )
வேற்றுமை-மதவேறுபாடு முதலியன எனலுமாம். பதிப்பட்டு-மனவமைதியுற்று எனலுமாம். வாழ்வார் வினையாலணையும் பெயர். (74)

எழுதியவர் : (13-Jun-16, 1:33 pm)
பார்வை : 38

மேலே