அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள்

கார்மேக கூந்தலடி அங்கே காற்றடித்தால்
வெள்ளி மழை சாரலடி

கன்னக்குழி அழகுமடி அதிலே
சறுக்கி விழுந்த நானுமடி

முத்தார சிரிப்புமடி
முத்துப் போன்ற பற்கலடி

நிலவில் பதித்த கருமையடி
உந்தன் கண்கலடி

போகாத இன்பமடி
பொல்லாத காதலடி
பொறுக்காத மனமுமடி

நெற்றிபிறை நிலவுமடி
நெஞ்சிலடித்த மின்னலடி
செவ்வான உதடுமடி
செந்தமிழ் நாட்டு தமிழ் மகளே !

எழுதியவர் : சே,மகேந்திரன் (13-Jun-16, 7:11 pm)
பார்வை : 225

மேலே