சசிபெருமாள் கண்ணுக்கு தெரியலயா
செய்தி:: உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்தே நிற்போம் - அன்புமணி.
@@##@@
பஞ்ச்:: இப்பகூட தனியாத்தான் நிக்கறீங்க!
- ரஹீம் கஸாலி, அரசர்குளம்.
@@@@@@@@@@@@
செய்தி:: குதிரை களவு போனபின் லாயத்தை இழுத்துப்பூட்டுவதா?
- தேர்தல் ஆணையத்துக்கு கருணாநிதி கேள்வி.
#@%@
பஞ்ச்:: தேர்தல் முடிஞ்ச பிறகு மாவட்டச் செயலாளர்களை நீக்கினதால என்ன பயனோ அதேதான்!
- கே. லக்ஷ்மணன், திருநெல்வேலி.
@@@@@@@@@@@
செய்தி:: உண்ணாவிரதமிருந்த சந்திரசேகர ராவ் உடல்நிலை மோசமடைந்ததால்தான் 'தனித் தெலுங்கானா' உருவானது.
- ஜெய்ராம் ரமேஷ்.
@%@%##
பஞ்ச்:: சந்திரசேகர ராவ்கள் தெரிகிற கண்களுக்கு சசிபெருமாள்கள் தெரிவதில்லையே!
- அ. சுகுமார், காட்பாடி.
@@@@@@@@@@@@
'தி இந்து' செவ்வாய், ஜூன். 14, 2016.

