நா சும்மிருதியுமில்ல அம்மிருதியுமில்ல

சும்முருதி, அடியே சும்முருதி இங்கே வாடி.
@@@@
எதுக்குப் பாட்டி கூப்பிட்டீங்க.
@###
அந்த பெட்டிக்கடைக்கு போயி எனக்கு வெத்தல பாக்கு வாங்கிட்டு வாடி.
@@@@
சரி வாங்கிட்டு வர்றேன் பாட்டிம்மா. என்ன என்னன்னு கூப்பிட்டீங்க.
@###
சும்முருதி –ன்னு கூப்பட்டென். அதுதாண்டி உன்னோட் பேரு.
@@@
பாட்டி, எம் பேரு சும்முருதியுமில்ல, அம்மிருதியுமில்ல. ஸ்ம்ரிதி. உங்களால எம் பேரச் சரியா சொல்லமுடியல்லன்னா உங்களுக்குப் பிடிச்ச தமிழ் பேர எனக்கு வச்சு அந்தப் பேரச் சொல்லியே என்ன கூப்பிடுங்க பாட்டி. நீங்க உங்க காலத்திலெயே இருக்கறீங்க பாட்டி. இப்பெல்லாம் இதுமாதிரி அர்த்தம் தெரியாத இந்தி வடமொழிப் பேருஙகள வைக்கறதுதான் நாகரிகம் பாட்டி.
@@@@
என்னமோ போடியம்மா. எனக்கென்ன வந்துச்சு. நீங்க அம்மின்னு பேரு வச்சாலும் சரி, கும்மின்னு பேரு வச்சாலும் சரிடி அம்மா. உங்க விருப்பம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@நன்றி: இண்டியா சைல்ட் நேம்ஸ்.காம் & சிரிப்புவார்ட்ப்ரஸ்.காம்

Smriti = Memory: Recollection
ஸ்ம்ரிதி; స్మృతి; ਸ੍ਮਰਤਿ; സ്മൃതി; ಸ್ಮೃತಿ; સ્મૃતિ; ; স্মৃতি
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப்பற்றை வளர்க்க. பிறமொழிப் பெயரின் பொருள் அறிய.

எழுதியவர் : மலர் (15-Jun-16, 10:19 pm)
பார்வை : 87

சிறந்த நகைச்சுவைகள்

மேலே