கதை இல்லா படம்
டேய் யாருகிட்ட பேசிகிட்டு இருக்க, அப்புறம் சொல்கிறேன் என்று நழுவிய நண்பனை எனதருகில் நிலைநிறுத்தி யாருன்னு சொல்றா என்றேன்.அவன் பேசிய வண்ணம் இருந்தவாறு சைகை காட்டினான்.உன் காதலியா, கை காற்றில் பறந்தது, உன் கூட படித்த பெண்ணா, அதற்கும் பறந்தது, அட போடா என்று விலகி நின்று பார்த்தேன், எனக்காக அவள் மட்டும் தனித்து காத்திருந்தாள், தெளிந்த நீரோடையில், பெருமூச்சு விட்டேன்.
ஒரு நாள் வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு அவன் வீடு வந்து சேர்ந்தேன். அவன் வீட்டில், அவன் மொட்டை மாடியில் இருப்பதாக சொன்னார்கள். அடிக்கிற வெயிலில் கூட இவன் விட மாடன் போல என நினைத்து கொண்டு, இரண்டு இரண்டு படிகளாக முன்னேறினேன்.
அவன் அனுமதி இல்லாமல் அவன் அலைபேசியை வாங்கி துண்டித்துவிட்டு, நண்பா வீட்டில் பிரச்சனை, வா சினிமாவிற்கு போவோம் என்றேன். அவன் என்னை முறைத்துகொண்டே அலைபேசியில் அழைத்தான். என் நண்பன் வீட்ல பிரச்சனையாம் நீ பேசு என அவளிடம் கூறி, என் காதில் அலைபேசியை வைத்தான்.
என்ன பிரச்சனை என, இங்கு ஆரம்பித்து, அரைமணி நேரத்தில் அமெரிக்கா சென்று திரும்பி விட்டாள்,
பின்னணி இசை மட்டும் என்னுடையது "ம்ம்" என்று. கடைசிவரை பிரச்னை என்ன வென்று பேசவில்லை. பேசும் முடிந்தாகி விட்டது. கடலையில் முதல் பாடம் கற்றுக்கொண்டு வீடு திரும்பினேன். கதை இல்லாத படம் இது தானோ!....

