என் அப்பா

நான்!
கருத்தரித்த தருணத்திலே! பாரமுகமின்றி!
என் தலைஎழுத்தை உன் இதயத்தில் பொன்...
எழுத்துகளால் பொரித்துவிட்டாய்!
ஆதலால் நீ! பிரம்மனுக்கும் மேலானவன்!!!
இரு கருவரையில் கருத்தரித்த...நான்!
தாயிடமிருந்து ஜனனம் பெற்றேன்!
ஆனால்! உன் இதயக்கோட்டையில்...
மணற்வீடு கட்டிவிளையாடும்!
மழலையாகவே இன்றளவும் வீற்றிருக்கிறேன்!!!
நான்!
தரையில் தவழும் தருவாயில்!
உனது இதயக்கூட்டில் இடைவெளியின்றி...
கமழும், இன்பமெனும் மலர்வாசனை!
என் விழிகளோரத்தில் கண்ணீர்ச்சாரல்...
கிஞ்சித்தேனும்! உன் இதய ஜன்னலை...
பிரவேசித்தால்! உன் இருதயத்தில்...
செந்நீர் ஊற்றுப்பெருக்கெடுக்கும்!!!

சிலுசிலுவென தென்றல் தேகத்தில்...
சில்மிஷம் பண்ண!
இலைகிளைகளின் இசைமெட்டு இதயத்தில்...
மத்தளம் கொட்ட!
கார்முகில்கள், மழைக்கனைகள் தொடுத்து...
என் கன்னத்தை முத்தமிட!
வான்கடலில் நீந்திய பறவைகள், எச்சத்தை...
என் நெற்றியில் வண்ணத்திலகமிட!
வானவில் நூர்கண்டுகளை கறந்து...
இந்திரப்பட்டத்தை ஆகத்தில் பறக்கவிட்டு!
முடி(கடி)வாளத்தை பிடித்து! உன் தோளில்...
நான் செய்த சவாரி!
இக்கணம்!
வானுர்தி பிரயாணம் என்றாலும்...
வசைபாடுகிறது நெஞ்சம்!!!
எனது! ஒருகரம் உனைப்பற்றிருக்க...
மறுகரத்தில் வெற்றிக்குவியலின்..
பொன்முடுச்சுகள் கைப்பிடியில்!
என்! பாதச்சுவடுகளின் இடுக்குகளில்...
பார்உருண்டை பம்பரமாய் சுழன்ருகின்றன!!!
ஓய்வுக்கு நீயளித்த நிரந்தர நித்திரையால்!
எனது நித்திரை நிரந்தரமானது!!!
தேய்பிறையாய் நீ தேய! வளர்பிறையாய்!
வளர்ந்தது எம் வாழ்க்கை!!!

நடமாடும் வானொலிப்பெட்டி!
வான்செவியை கிழிக்கும் கிரிச்சான்...
குரலுக்கு சொந்தக்காரனான, உனது...
ஓட்டைச்சகடத்தில் ஓராயிரம் தோரணைகட்டி!
ராப்பொழுதில் நீ வரும் உலா!
தெருவாசிகளுக்கு சிவராத்திரி திருவிழா!!!

தூரத்து சொந்தமென! வான்வெளியிலிருந்து வந்த...
அழையா விருந்தாளிகள் மழைத்துளிகளை தவிர...
யாதவகுலத்தின் அக்ரோணி சேனையே வந்தாலும்...
தகர்க்க முடியாத செங்கோட்டை!
செந்நீர் சிந்தி நீ கட்டிய குடிசை வீடு!!!
அதில்!
இரத்த யாசக முகாமிட்டு! அனுமதியின்றி...
இலட்சமுறை இரத்த தானம் பெற்ற...
நம் சகோதரர்களான அட்டப்பூசிகளின்
ஆக்கிரமிப்பு!!!
அக்கம்பக்கத்தினரின் கண்கள்!
செந்தேள்கொடுக்கு செம்மேனியை...
துளைத்து செந்நீரில் நஞ்சை விதைக்கும்,
பொறாமை புகைச்சலில், அணையாத்...
தீக்கொளுந்தாய் எறிந்தாய்!
ஆதலால் துன்பமெனும் இருள்!
இன்பமெனும் எனது பிறையை,
சிறைபிடிக்க முடியவில்லை!

எழுதியவர் : Maniaraa (18-Jun-16, 11:09 pm)
பார்வை : 887

மேலே