காதல் அகதி

தம்பி, நீ இந்த ஊருக்குப் புதுசா வந்த பையன் மாதிரி தெரியுது. சோர்வா இருக்கற போல.
@@@@@
அய்யா நா ஒரு அகதிங்க. சாப்பிட்டு ரண்டு நாள் ஆகுதுங்க. எம் பேரு இளங்கோ.
###
நீ அகதின்னு சொல்லற. இலங்கையிலிருந்து தப்பிச்சு வந்தயா?
@@@@@

இல்லங்க அய்யா. நானும் இந்த நாட்டுக்காரன் அய்யா. நா காதல் அகதிங்க.
@@@@@@
என்ன தம்பி புதுசா நாங்க இதுவரைக்கும் கேள்வப்படாத 'காதல் அகதி'ங்கற ரண்டு வார்த்தைங்களச் சொல்லற?
@@###
அய்யா சத்தியமா நாஞ் சொல்லறது உண்மைதானுங்க. நா இளிச்சவாயம்பட்டியைச் சேர்ந்தவனுங்க. எங்க பக்கத்தூரு மூக்கறுத்தான் பட்டியைச் சேர்ந்த பொன்மணிங்கற பொன்னு எம் மேல ரொம்ப ஆசப்பட்டா. எங்காவது ஓடிப் போயி கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னா. நாங்க ரண்டுபேரும் வேறவேற சாதிங்க.
@@@@@
சரி. அப்பறம் நடந்ததென்ன சொல்லு தம்பி.
@@@@
அய்யா நானும் பொன்மணியும் பேசிட்டு இருக்கறபோதே தகவல் அறிஞ்ச அவுங்க ஊரு ஆளுங்க பத்துப்பேரு பயங்கர ஆயுதங்களோட வந்து என்ன மெரட்டி " ஊரவிட்டே ஓடிப் போயிடு. இல்லன்னா, இளிச்சவாயன்பட்டியை அடிச்சு நொறுக்கி வெடியறதுக்குள்ள கொளுத்திடுவோம்"ன்னு சொல்லிட்டு பொன்மணியை கதறக் கதற அடிச்சு இழத்துட்டு போயிட்டாங்கய்யா.
@@
அடப் பாவமே. அப்பறம் என்னாச்சு?
@@@@@
தர்மபுரி மாவட்டத்தில ஒரு கிராமத்தையே தீ வச்சு கொளுத்தின சம்பவம் எந் ஞாபகத்துக்கு வந்ததுங்கய்யா. சாதி கலவரம் ஏற்படாம இருக்கறதுக்கும் எங்க ஊர் இழிச்சவாயன்பட்டி மக்களைக் காப்பாத்தறதுக்குக்கும் நா இங்க ஓடி வந்தட்டுங்க அய்யா.
@##@@
நீ சொல்லற இளிச்சவாயன்பட்டியும் மூக்கறுத்தான்பட்டியும் இங்கிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தல இருக்கற வெறியான்பட்டிக்குப் பக்கத்தில இருக்கற கிராமங்கள் தானே. எனக்கு அந்த ஊருங்களப்பத்தி நல்லாத் தெரியும் தம்பி. அது ஆணவக் கொலை அதிகம் நடக்கற பகுதி தம்பி. நீ இங்க வந்ததாலே பெரிய சாதி மோதலையே தடுத்திருக்கற தம்பி. தம்பி இந்த ஊரு பெரியார் சமத்துவபுரம். இங்க எல்லா சாதியனரும் எல்லா மதத்தினரும் ஒற்றுமையா வாழந்திட்டு இருக்கறோம். எங்க ஊருக்காரங்க அனைவருமே சாதி/மத பேதமற்ற கலப்புத் திருமணத்தின் ஆதாரவாளர்கள். நீ ஒண்ணும் பயப்படாதே. நீ தங்கறதுக்கு எங்க ஊரு தலைவர்கிட்ட சொல்லி தகுந்த ஏற்பாட்டை ஒடனே செய்யறோம். உனக்குப் பிடிச்ச எங்க ஊரு பொண்ணு ஒருத்திய கல்யாணம் பண்ணி வைக்கறோம். பக்கத்து நகரத்ல எங்க தலைவரின் பெரிய தொழிற்சாலை ஒண்ணு இருக்குது. அதுல எங்க தலைவரு உந் தகுதிக்கும் திறமைக்கும் ஏத்த வேலையைப் போட்டுத் தருவாரு. தம்பி, எங்க ஊரு வந்தாரை வரேற்று வாழ வைக்கும் புண்ணிய பூமிப்பா.
@@@@@@
அய்யா நா ஊர விட்டு ஓடி வந்து கடைசில இஙக வந்து இந்த புண்ணிய பூமியோட ஐக்கியமாகப் போறேன். நா குடுத்து வச்சவன் அய்யா. யாருக்கு கெடைக்கும் இந்த பாக்கியம். உங்களுக்கு கோடான கோடி நன்றி அய்யா. வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் சில பகுதிகள்ல சாதிவெறி தலவிரிச்சு ஆடுதங்கய்யா. இந்த புண்ணிய பூமி பெரியார்சமத்துவபுரத்தில் சாதி மத பேதமற்ற சமத்துவம் இருக்கறத நெனச்சா எனக்கு பெருமையா இருக்குதுங்க அய்யா. தமிழ் நாடே சாதி மத பேதமற்ற சமத்துவ மாநிலமாக மாறிட்டா நம்ம நாடே நல்ல மாற்றம் பெற்று முன்னேறும் அய்யா.
@@@##@@
தலைப்புக்கு
நன்றி: தொலைக் காட்சி விளம்பரத்தில் வந்த 'காதல் அகதீ'.
@@@@@@@@@@@
படம்: கூகுல்
@@###################%####

எழுதியவர் : மலர் (21-Jun-16, 12:01 pm)
Tanglish : kaadhal agathi
பார்வை : 270

மேலே