இயற்கை பேண்

இயற்கைத் தாய் கொடுத்த
இனிய கொடைகளதை
இயன்றவரை நாம் காப்போம்
இன்பமாய் நாம் வாழ்வோம்


நீருண்டு நிலமுண்டு
நிம்மதியாய் நாம் வாழ
நீண்ட மர நிழலுண்டு


கடலுண்டு காடுண்டு
காட்டாற்று வெள்ளமென
கரை கடந்த வளமுண்டு


மலையுண்டு மடுவுண்டு
வெளியுண்டு வெய்யிலுண்டு
வகை வழி பலவுண்டு
விரும்பி வாழ வழியுண்டு


இறைவனவன் படைப்பினிலே
இனிமையான இயற்கையுண்டு
இயற்கையவள் மடியினிலே
கொண்டமைந்த வளங்களை நாம்


வரம்பு சொல்லி பாதுகாப்போம்
வளமாய் வாழ வழி சமைப்போம்

எழுதியவர் : சர்மிலா (22-Jun-16, 1:12 pm)
பார்வை : 167

மேலே