வாழ்வது தான் காதல்

கை கோர்த்து சுற்றவில்லை
முகநூல் பார்த்து பழகவில்லை

காதல் கடிதம் கூட எழுதவில்லை
தூது சொல்லவில்லை!!!

உன் காதலே என்னிடம்
சொல்லாமலே
எப்பிடிடா தெரியும் எனக்கு

பேசுவதும் , தொடுவதும்
காதல் அல்ல
பிறர் வியக்கும் படி
வாழ்வது தான் காதல்

காதல் உணர்ச்சியில்
இல்லை உணர்வில்
வாழ்கிறது

துணையாக வந்து
துன்பம் துடைத்தாய் !!!
இணையாக வாழ்வேன்
இன்பம் பெறுவோம் !!!!!

எழுதியவர் : (22-Jun-16, 2:02 pm)
பார்வை : 155

மேலே