மங்கையராய் பிறப்பதற்கேநல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா

மங்கையராய் பிறப்பதற்கேநல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா

அதிகாலையில், சேவலுடன் கூவி எழுந்து
அரிசிமாக்கோலமிட்டு
கோமகளுடன் குலவி
உற்றாரை கவனித்து....மகிளுமவள்

நண்பகல் வரை நாற்று நட்டு
எற்பாடு வரை ஏற்றம் இறைத்து
மாலைவரை களையெடுத்து
மரைகளுடன் விளையாடும்
இயற்கைத்தோழியவள்....

வாவானவில்லில் ஆடை உடுத்தி
கானக்குயிலிடம்...இசைபழகி
மயிலுடன் அரங்கேற்றம் செய்து
கவியமுது படைத்திடும்...இயற்கையன்னையவள்

நாலும் இரண்டும் சொல்லி
எண்ணும் எழுத்தும் கற்பித்து
அறம் உணர்த்தி
வாழ்க்கையை கற்றுத்தரும்
கலைமகளவள்....

மங்கையவளைப்போல்
மழலைச்செல்வங்களுக்கு
தாயாய்
தோழியாய்
கல்வியுணர்தும் கலைமகளாய்
சேவை புரிந்து....வாழ்ந்திட

என் தமிழ்த்திருமகள்....என்ன தவம் செய்தாளோ?

எழுதியவர் : தமிழ்க்கொடி (22-Jun-16, 4:59 pm)
பார்வை : 123

மேலே