பிரம்மாவிடம் மனு•••
![](https://eluthu.com/images/loading.gif)
வாருங்கள் எல்லோரும்
காலனுக் கெதிராய்
மனு கொடுப்போம் !
அவன் சாகாமல்
இருப்பதால் தானே !
நமக்கெல்லாம்
சாவு வருகிறது !
அவன்
செத்துப்போனால்
நமக்கேது இனி சாவு !
எத்தனை காலம் அந்த
காலனை விட்டு வைக்க !
வாருங்கள் எல்லோரும்
காலனுக் கெதிராய்
பிரம்மாவிடம் சென்று
மனு கொடுப்போம் !