பயணம்

கருவில் இருந்து
தரையில் வந்தோம்
அற்புத பயணம் அது
பூமியில் நடந்து
பாதையில் தவழ்ந்தோம்
அழகிய பயணம் அது
பல்பம் எடுத்து
பள்ளி சென்றோம்
பசுமையான
பயணம் அது
கலர் கலர் சட்டை போட்டு
கல்லூரி சென்றோம்
அழியாத பயணம் அது
இரு மனங்கள்
இனைந்து இல்லறம் சென்றோம்
வாழ்க்கை பயணம் அது.
வாழ்ந்து முடித்து
வானம் சென்றோம்
வாழ்வின் இறுதி பயணம் அது.
-கவிபிரவீன்குமார்.