மது

மது
மண்ணைக் கெடுக்கும் - உன்
மனதைக்கெடுக்கும்.

வஞ்சம் விதைக்கும் - உன்
வாழ்வை வதைக்கும்.

மயக்கம் கொடுக்கும் - உன்னை
மடிய வைக்கும்.

மதிப்பும் மறையும் - உன்
சிறப்பும் குறையும்.

கொஞ்சம் நினைத்தால் - உன்
நெஞ்சம் நினைத்தால்,

மதுவை மறப்பாய் - நீ
வாழ்வாய் சிறப்பாய்.

சமூக முன்னேற்றத்தில்
-கவிபிரவீன்குமார்.

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (24-Jun-16, 6:02 am)
Tanglish : mathu
பார்வை : 334

மேலே