அனாதை

அம்மா என்றழைத்தாலும்
அனைக்க ஓர்
அன்னையில்லை
அப்பா என்றழைத்தாலும்
ஆதரவு சொல்ல ஓர்
ஆளில்லை
ஏராள துயர் வந்தும்
ஏனென்று கேட்க ஓர்
நாதியில்லை
அடிபட்டு இறந்தாலும்
அடக்கம் செய்ய ஓர்
உறவில்லை
வாழ்க்கை வாழ
நினைத்தாலும் ஓர்
வழி எனக்கு தெரியவில்லை
கடவுள் ஒருவர் இருந்தாலும் அவர்
கண்திறந்து பார்க்கவில்லை,
வாழ்க்கையின் விளிம்பில்
-ரோட்டோர அனாதைகள்