துணிவே துணை

முடியாது என்று முயாலாமை கொண்டு
ஒடிகின்ற வில்லை ஒடியா - தடிஎன்று
ராமன் நினைத்திருந்தால் ராமா யணசீதை
மாமனென்று இல்லை அவன் .

துணிவே துணையாய் துடிப்போ டெழுந்து
அணிகின்றத் தைரியமே ஆண்மை. – பணிக்கேற்ப
தத்தம் முடிவை தயங்கா தெடுத்தாங்கு
முத்திரை குத்த முனை.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (24-Jun-16, 4:39 am)
பார்வை : 130

மேலே