நோன்பின் மாண்பு
பாவங்கள் போக்கிப் பரிசுத்த மாக்கிடும்
ஈவதால் கிட்டும் இறையருள் - யாவரும்
மேற்கொள்ளும் நோன்பினால் மேன்மையுற லாம்வாழ்வில்
வேற்றுமையும் நீங்கும் வியப்பு .
இறையச்சம் கொண்டே எதனையும் செய்ய
குறைவற நன்மைகள் கூடும் - நிறைவுடன்
நோன்பிருக்கத் தீராத நோயும் குணமாகும்
ஆன்மபலம் சேர்க்கும் அறி .
புலன்க ளடக்கப் புனித மடையும்
பலன்கள் பெருகும்நற் பண்பால் - உலகோர்
பசியை யுணர்ந்து பரிவுடன் தீர்க்கக்
கசிந்திடும் அன்பும் கனிந்து .